பாரத குடியரசு - மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்! அசாம் முதல்வர் ட்விட்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு வரும் செப்டம்பர் 9ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக முக்கிய நபர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் அரசியல் சாசனத்தின் 1வது பிரிவில் இடம்பெற்றுள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் அசாம் மாநில முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "பாரத குடியரசு - நமது நாகரிகம் அமுத காலத்தை நோக்கி தைரியமாக முன்னேறி வருவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AssamCM tweet Republic of Bharat is happy and proud


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->