புதுவையில் அடுத்த மாதம் 3-ந்தேதி சட்டசபை கூடுகிறது - சபாநாயகர் தகவல்.!
assembly meeting in puthuchery on february 3rd
புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் சட்டசபை கூடியது. கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி கூடுகிறது.
இதுகுறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்ததாவது, "இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா தடையாக உள்ளார். இவருடன் இணைந்து பிற அதிகாரிகளும் மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வருகிறார்கள்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தாமல் திருப்பி அனுப்புவதற்கு அதிகாரிகளே காரணம். இந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகாளாக புதுவை சட்டசபையில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மாநில அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
assembly meeting in puthuchery on february 3rd