இந்தியாவில் இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு சூப்பர் செய்தி.! ஆய்வில் வெளிவந்த உண்மை.!
Asterazena vaccine information makes happy
கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியது. இந்த தடுப்பூசி
பல நாடுகளில் பயன்பாட்டில் இருக்கின்றது.
அத்துடன் இந்த தடுப்பூசியை தான் இந்தியாவில் "கோவிஷீல்டு" எனும் பெயரில் புனே சீரம் நிறுவனம் தயாரித்து மக்களுக்கு வினியோகித்து வருகின்றது.
இத்தகைய நிலையில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, இந்த மருந்தை மூன்றாவது தவணையாக செலுத்தி கொள்ளும் பொழுது கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி மக்களுக்கு கிடைப்பதாக ஆய்வில் மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
அத்துடன் ஆல்ஃபா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வைரஸ்களுக்கு எதிரானதாகவும் இந்த அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி சிறந்த பாதுகாப்பை வழங்குகிறதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
English Summary
Asterazena vaccine information makes happy