நட்பாக பழகி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்...! வேலை தேடி சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம்...!!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் ஒரு தனியார் நிறுவனத்தில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 16-ந்தேதி மங்களூருவிலுள்ள நிறுவனங்களில் வேலை தேடுவதற்காக தனது நண்பர்களுடன் அந்த இளம்பெண் வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டதால், இளம்பெண்ணின் செல்போன் சேதம் அடைந்தது.

இதைத்தொடர்ந்து, அவர் செல்போனை பழுது பார்க்க ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார்.அப்போது ஆட்டோ டிரைவர்கும் இப்பெண்ணிற்கும்  நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவள், இரவு ரெயில் நிலையத்தில் தன்னை இறக்கி விடும்படியும், சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாகவும் ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆட்டோ டிரைவர் அவளை ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லாமல் உல்லால் அருகே முன்னூர் பகுதியிலுள்ள நேத்ராவதி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அவளை, அவர் வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்ததில் சுயநினைவை இழந்துள்ளார் அப்பெண்.

பின்னர் ஆட்டோ டிரைவர், தனது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து 3 பேரும் சேர்ந்து அவளை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் அதிகாலை 1.30 மணி அளவில் அவருக்கு சுயநினைவு திரும்பியது.

அப்போது தான் தன்னை ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்தது அவருக்கு தெரியவந்தது.இதையடுத்து அவர் உள்ளூர் மக்கள் மற்றும் ஒய்சாலா காவலர்கள்  உதவியுடன் மருத்துவமைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.பிறகு இச்சம்பவம் குறித்து அப்பெண், உல்லால் காவலில் புகார் அளித்தார்.

அதன்பேரில் காவலர்கள் , அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.மேலும் இளம்பெண் ஆட்டோ டிரைவருக்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்தியிருந்தார். அதன் அடிப்படையிலும் காவலர்கள் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் முல்கியை சேர்ந்த பிரபுராஜ் (வயது 38) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் தான் இளம்பெண்ணை கடத்தி சென்றதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.பின்னர் காவலர்கள் ஆட்டோ டிரைவர் பிரபுராஜ், அவரது நண்பர்களான கும்பாலாவை சேர்ந்த மிதுன் (30), மணீஷ் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

auto driver who harassment woman who went looking for work


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->