பிளாஸ்டிக் தோலுடன் பிறந்த இரட்டைக் குழந்தைகள் - அதிர்ச்சியில் பெற்றோர்.!
baby born plastic skin in rajasthan
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.ஆனால், இந்தக் குழந்தைகள் தோல் பிளாஸ்டிக் போன்று காணப்படும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, குழந்தைகளின் தோல் பிளாஸ்டிக் போல மிகவும் கடினமாக இருந்தது. தோலில் பல இடங்களில் விரிசல் தெரிந்தது. இந்த நோய், மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் அரிதான ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் நோய் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நோயால் குழநத்தைகள் எதிர்காலத்தில், எழுந்து உட்காருவதற்கு கூட கடினமாகிவிடும். பெற்றோரின் மரபணுக்களில் ஏற்படும் குறைபாடு காரணமாக இந்த நோய் ஏற்படுவதாகவும், இதனால், குழந்தையின் தோல் கடினமாகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், புதிய சிகிச்சையின் காரணமாக, பத்து சதவீத குழந்தைகள் இந்த நோயை ஓரளவு சமாளிக்க முடிகிறது. ஆனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தோல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. சில குழந்தைகள் உயிரிழக்கவும் நேரிடும்.
English Summary
baby born plastic skin in rajasthan