அபாயம்!!! வங்கி ஊழியர்களின் தொடர் போராட்டம்...! நான்கு நாட்களுக்கு சேவை முடங்கும் என எச்சரிக்கை...!!!!
Bank employees continue to protest Warning that services will be disrupted for 4 days
புதுடெல்லியில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 24, 25 தேதிகளில் 48 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.மேலும் இந்த போராட்டத்தில் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

தற்போது போராட்ட அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், வங்கி பணிகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாதம் 2 மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையொட்டி இம்மாதத்தில் மார்ச் 22ம் தேதி 4வது சனிக்கிழமையாகும். அதற்கு மறுநாள்(மார்ச் 23) ஞாயிறு விடுமுறை.போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் வங்கிகள் இயங்காது.
அவ்வகையில் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் வங்கிகளில் சேவை இருக்காது என தெரிகிறது.இதைத்தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணவரிவர்த்தனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்செய்தி தற்போது மக்களிடையே சலசலப்பு பேச்சுவார்த்தையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bank employees continue to protest Warning that services will be disrupted for 4 days