தொடர்ந்து உயரும் பீர் விலை - அதிர்ச்சியில் மதுபிரியர்கள்.!
beer price increase in karnataga
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் கலால் வரியை அரசு உயர்த்தி இருந்தது. இதனால் மதுபானங்கள் மற்றும் பீர் விலை ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்த்தப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து, புத்தாண்டு தொடக்கத்தில் சில மதுபானங்களின் விலை மட்டும் உயர்த்தப்பட்டு இருந்தது. அந்த மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனங்களே உயர்த்தி இருப்பதாகவும் கலால்துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாபூர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் மீண்டும் பீர் விலையை மட்டும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, பீருக்கு மட்டும் 10 சதவீத கலால் வரி விதிக்க அரசு முன்வந்துள்ளது என்றும், அதுபற்றி அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் அரசுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.20 கோடி முதல் ரூ.40 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் 16-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஒரு பீர் விலை ரூ.10-ல் இருந்து ரூ.15 வரை உயர வாய்ப்புள்ளது. இதன்மூலம் கடந்த 9 மாதத்தில் பீர் விலை 2-வது முறையாக உயர இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைக்கேட்டு மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் மதுபானங்களின் விலையை தொடர்ந்து உயர்த்துவதற்கு மதுப்பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
English Summary
beer price increase in karnataga