எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் பகவந்த் மான்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த் மான் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

நடைபெற்ற முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. ஆம் ஆத்மி கட்சி சார்பாக பகவந்த் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்க்ரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக பகவந்த் மான் பதவி ஏற்க உள்ள நிலையில் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. வரும் 16ஆம் தேதி பஞ்சாப் மாநில முதல்வராக பகவந்த் மான் பதவி ஏற்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhagavand maan resign MP Post


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->