பீகார் மத்திய அமைச்சரின் பேத்தி கணவனால் சுட்டு படுகொலை..!
Bihar Union Minister granddaughter shot dead husband absconded
மத்திய அமைச்சர் ஜித்தன் மஞ்சி மக்களவை எம்.பி.யாக இருப்பதுடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சராகவும் இருந்து வருகிறார். இவர் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதசார்பற்ற) கட்சியின் நிறுவனரான அவர், பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவரது பேத்தி சுஷ்மா தேவி, பீகாரின் கயா நகரில் அத்ரி என்ற பகுதிக்கு உட்பட்ட தெத்துவா கிராமத்தில், அவருடைய கணவர் ரமேஷ் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அத்துடன், அவருடைய சகோதரி பூனம் குமாரியும் வீட்டில் இருந்துள்ளார். சுஷ்மா தேவிக்கும் அவரது கணவருக்கும் இடையில், குடும்ப தகராறில் துப்பாக்கியால் சுட்டதில் தேவி பலியாகியுள்ளார்.

இது குறித்து, பூனம் குமாரி நிருபர்களிடம் கூறும்போது, மதியம் 12 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரமேஷ், மனைவி தேவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில், தகராறு முற்றியது. இதனால், நாட்டு துப்பாக்கி ஒன்றை எடுத்து தேவியை சுட்டு விட்டு தப்பி விட்டததாக கூறியுள்ளார்.
சம்பவம் நடந்தபோது தேடிவில் குழந்தைகள் பூனம் அறையில் இருந்ததாகவும், அவர்கள் சத்தம் கேட்டு, உடனடியாக ஓடி சென்றதாகவும், அறையில் தேவி குண்டு காயத்துடன் கிடந்ததாகவும், இதனை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். அத்துடன், சுஷ்மா தேவி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரமேஷ் தன்னுடைய சகோதரியை கொலை செய்து விட்டார். அவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். அவரை தூக்கில் போட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சுஷ்மா தேவி பீகார் மகாதலித் விகாஸ் என்ற இயக்கத்தின் கீழ், வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தவர். லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த ரமேஷ், மனைவியை சுட்டு கொன்று விட்டு தப்பியோடியுள்ளார்.
இதுபற்றி சிறப்பு படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். சுஷ்மாவும், ரமேசும் வெவ்வேறு சமூகத்தினர் என்றும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி ஜித்தன் மஞ்சி உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Bihar Union Minister granddaughter shot dead husband absconded