ஒரு வருடத்திற்கு பின் திருப்பதியில் ரூ.2 கோடியாக குறைந்த உண்டியல் வருவாய்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு கொரானா தொற்றுக்குப் பிறகு கடந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அதன் படி, தினமும் 60 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்தனர். 

இதனால், உண்டியல் வருவாயும் அதிகரித்து ஒரு நாளைக்கு சுமார் 3 கோடிக்கு மேலும், மாதத்திற்கு ரூ.120 முதல் ரூ.130 கோடி வரையிலும் வசூல் ஆனது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி நடைபெற்ற வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அறிவித்திருந்தது. 

அதன் படி, தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 உள்ள ஆன்லைன் தரிசனத்தில் 20 ஆயிரம் பேரும், இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் 50 ஆயிரம் பேர் என்று தரிசன சீட்டு வழங்கப்பட்டிருந்தது. 

அந்தவகையில், வைகுண்ட ஏகாதசி மற்றும் தொடர்ந்து பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாக ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர். 

ஆனால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட பகுதியளவாக குறைந்தது. இந்நிலையில், நேற்று திருப்பதியில் 47,781 பேர் தரிசனம் செய்தனர். அதில், 15,695 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 

இதன் மூலம் ரூ.2.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. கடந்த ஓராண்டிற்கு பின்னர் திருப்பதியில் ஊண்டியல் வருவாய் ரூ.2 கோடி அளவிற்கு குறைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bill revenue two crores down in tirupati


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->