பெங்களூரில் பாஜக பிரமுகர் தற்கொலை -  கடிதத்தில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ...!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வந்தவர் வினய் சோமய்யா. குடகு மாவட்டத்தை சேர்ந்த இவர், பா.ஜனதா கட்சியின் பிரமுகராகவும், ஹெண்ணூர் அருகே நாகவாராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும் பணியாற்றினார். 

இந்த நிலையில், வினய் நேற்று முன்தினம் நாகவாராவில் உள்ள அலுவலகத்திற்கு வேலைக்கு வந்திருந்தார். பின்னர் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வினய் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தார். அதாவது, பாஜக பிரமுகரான வினய் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவருடைய சட்ட ஆலோசகரும், குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பொன்னண்ணா குறித்து வாட்ஸ்-அப் குழுவில் தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வினய் மீது எம்.எல்.ஏ.வின் ஆதரவாளரான தன்னீரா மகீனா புகார் அளித்திருந்தார்.

அதன் படி, வினயை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு விவகாரத்தில் வினய் தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்தது. மேலும், வினை தற்கொலைக்கு முன்பாக தான் எழுதிய கடிதத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். அதில், எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொல்லை கொடுப்பதாக வினய் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார்.

இ்து குறித்து வினயின் அண்ணன், எம்.எல்.ஏ. பொன்னண்ணா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து வினய் தற்கொலைக்கு காரணமான காங்கிரஸ் எம்.எல்.ஏ., அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp excuetive sucide in banglore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->