பாலியல் வன்கொடுமை! சிக்கிய வீடியோ ஆதாரங்கள்! பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டு உறுதி?!
Karnataka JDS MP Harassment case
கர்நாடக மாநிலம், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது, பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹேலேநரசிபுரா பகுதியில் உள்ள பிரஜ்வலின் பண்ணை வீட்டில் பணிபுரிந்த அந்தப் பெண், 2021ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல முறை பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக புகார் அளித்திருந்தார். பலமுறை அடைத்து வைக்கப்பட்டதாகவும், வீடியோ எடுத்து மிரட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டினர்.
இந்த வீடியோக்கள் இணையத்தில் பரவியதை அடுத்து, சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் அனைத்து சான்றுகளையும் பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சிபிசிஐடி.
இதில், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 9 அன்று விசாரணைக்கு முன்நிலையிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது.
English Summary
Karnataka JDS MP Harassment case