இதய அறுவை சிகிச்சை... 7 பேரை கொலை செய்த போலி மருத்துவர் கைது! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலம் டாமோவிலுள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரிட்டனை சேர்ந்த பிரபல இதயநிபுணர் Dr.N. John Kem எனத் தன்னை அறிமுகப்படுத்திய நபர், போலி ஆவணங்கள் மூலம் வேலைக்கு சேர்ந்தார்.

இவரது உண்மையான பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. போலியான ஆவணங்கள் மூலம் மருத்துவ பணியில் நுழைந்த இவர், ஒரு மாதத்திற்குள் 7 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து, அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சைக்காக அவர் நியமிக்கப்பட்ட மருத்துவமனையில் சேர்ந்த சிலர், அவரின் திறமை குறித்து சந்தேகம் எழுப்பிய நிலையில், ஜபால்பூருக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதன்பின்னர், ஹைதராபாதில் இவர்மீது ஏற்கனவே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

தமோ மாவட்ட குழந்தைகள் நல ஆணையர் இதுகுறித்து தெரிவிக்கையில், "அவரால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 என்பது அதிகாரப்பூர்வமானது. உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.

மத்திய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் தெரிவிக்கையில், இந்த மருத்துவமனை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிதி பெற்றதையும், இது மிகுந்த அதிர்ச்சியளிக்கும் விவகாரமாக இருப்பதாகவும் கூறினார்.

போலி மருத்துவர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், போலீசும் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து தேடிவருகின்றனர். உறவினர்களும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhya Pradesh fake doctor Ayushman Bharat Yojana 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->