அட கொடுமையே! ஃப்லோவர்ஸ் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட இன்ஸ்டா பிரபலம்!
Gujarat Insta Followers issue Youngman death
குஜராத்தின் சூரத் மாவட்டம் குடியானா கிராமத்தைச் சேர்ந்த பிரதீக் படேல் (21), இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது காரணமாக தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற நடிகராக வேண்டும் என்ற லட்சியத்தோடு ஜிம்மில் பயிற்சி எடுத்துவரும் பிரதீக், தனது உடற்பயிற்சி வீடியோக்களை தினமும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வடிவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
300-க்கும் மேற்பட்ட ரீல்ஸ்கள் இருந்தபோதிலும், அவருக்கு 7,923 மட்டுமே பின்தொடர்வோர் இருந்தனர்.
அதிக பின்தொடர்வோர்களை கொண்டவர்களின் ஐடி-களை காணும் பிரதீக், மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தந்த ஏப்ரல் 1 அன்று அவரின் கிராமத்தின் கிரிக்கெட் மைதானத்தில் அவர் விலகி விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். விசாரணையில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டத்து தெரியவந்துள்ளது.
இருப்பினும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Gujarat Insta Followers issue Youngman death