வசதியான ஆண்களை குறிவைத்த பெண்; 04 ஆண்களை காதலித்து திருமணம்; பணம், நகைகளுடன் ஓட்டம்; போலீசார் தேடுதல் வேட்டை..!
Woman who targeted wealthy men fell in love with 04 men and married them fled with money and jewelry
கர்நாடகாவில் வசதியான ஆண்களை குறிவைத்து 04 ஆண்களை காதலித்து திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளுடன் ஓடியுள்ள பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பெண் ஏற்கனவே மூன்று கணவர்களை விட்டுச் சென்ற நிலையில், தற்போது நான்காவது கணவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம், மத்தூர் அடுத்த கெஸ்தூரு கிராமத்தைச் சேர்ந்த புட்டசாமியின் மகள் வைஷ்ணவி. மல்லனாயக்கனகட்டே கிராமத்தைச் சேர்ந்த சஷிகாந்த் ஆகியோர் கடந்த 08 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
காதலிக்கும் போது தான் மிகவும் ஏழ்மையான பெண் என்று கூறிய வைஷ்ணவி, திருமணத்திற்கு முன்பே அந்த ஆணிடம் ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார். அத்துடன், திருமணத்திற்கு நகைகள் வாங்க வேண்டும் என்று கூறி அவரிடமே மீண்டும் 100 கிராம் தங்கத்தை வாங்கியுள்ளார்.

அவரும் தனது வருங்கால மனைவி தானே என்று ரூ.06 லட்சம் பணத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். அத்துடன், தனது வருங்கால மாமனாருக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளதோடு, வீட்டு முன்பணத்திற்காக ரூ.50 ஆயிரம், மாமியாருக்கு பழைய செயினை கொடுத்துவிட்டு 46 கிராம் எடையில் புதிய செயின் போன்றவையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும் பெண் வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் மற்றும் அனைவருக்கும் ஸ்மார்ட் போன்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி சஷிகாந்த் – வைஷ்ணவி ஜோடிக்கு ஆதிசுஞ்சனகிரி க்ஷேத்திரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதன் பின்னர் மறுநாள், புதுமணத் தம்பதியினர் கவுடகெரே சாமுண்டேஸ்வரி கோயிலுக்கு சாமி கும்புடுவதர்காக காரில் சென்றுள்ளனர். அப்போது, உம்மடிஹள்ளி கேட் அருகே தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சஷிகாந்த் காரை விட்டு இறங்கியுள்ளார்.

ஆனால், அந்த சமயம் பார்த்து, ஏற்கனவே திட்டமிட்டபடி பின்னால் வந்த காரில் வைஷ்ணவி ஏறி தப்பி ஓடியுள்ளார். தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு காரில் தனது புது மனைவி வைஷ்ணவி மாயமானது கண்டு மாப்பிள்ளை அதிர்ச்சியடைந்துள்ளார்.
மனைவி காணாமல் போனதை தொடர்ந்து சஷிகாந்த் போலீசில் புகார் அளித்த்துள்ளார். போலீசாரின் தீவிர விசாரணையில், வைஷ்ணவிக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்துள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அந்த பெண் முன்னாள் கணவர்கள் தர்மஸ்தலாவைச் சேர்ந்த ரகு என்றும், அவருக்கு பின்னர் ஷிவா என்றும், அவருக்கு பின்னால் மற்றொருவருடன் திருமணம் செய்து கொண்டு வைஷ்ணவி வாழ்ந்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வைஷ்ணவி வசதியான ஆண்களை குறிவைத்து காதலிப்பத்தோடு, பின்னர் அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்து, அவர்களிடம் இருந்து பணம், நகைகளை வாங்கிக் கொள்வார். அத்துடன், அவர்களுடன் பல இடங்களுக்கு ஜாலியாக சுத்துவதோடு, திருமணம் செய்த பின்னர், திருமணமான முதல் நாளே நகைகள், பணத்துடன் தப்பியோடிவிடுவார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பெண்ணுக்கு பின்னால் வேறொரு கும்பல் இருப்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று கணவர்கள் அளித்த புகாரின்படியும், நான்காவதாக திருமணம் செய்து கொண்ட சஷிகாந்த் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் அந்தப் பெபோலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Woman who targeted wealthy men fell in love with 04 men and married them fled with money and jewelry