ஒடிசாவில் பாஜக அரசு பதவி ஏற்பதில் தாமதம்..பதவி ஏற்பு விழா 12-ம் தேதிக்கு மாற்றம்!!
BJP government in Odisha 12th posting
ஒடிசாவில் பாஜக அரசு பதவி ஏற்பதில் தாமதம். 10ம் தேதி பதவி ஏற்பு விழா என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 12-ம் தேதிக்கு மாற்றம் தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. ஆளும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. பாஜக ஒடிசா கைப்பற்றியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் ஆக நவீன் பட்நாயக் 24 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக்கின் வலது கையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விளக்குவதாக காணொளி வெளியிட்டுள்ளார். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒடிசாவில் பாஜக அரசு இன்று பதவி ஏற்கும் என்று அறிவித்தது. ஒரிசாவில் பாஜக அரசு பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பதவியேற்பு விழா வரும் ஜூன் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
BJP government in Odisha 12th posting