கர்நாடகாவை குட்டி பாகிஸ்தானாக மாற்ற காங்கிரஸ் முயற்சி - பாஜக தலைவர் ஆர்.அசோகா பேட்டி.!
bjp leader ashoka press meet
கர்நாடகாவை குட்டி பாகிஸ்தானாக மாற்ற காங்கிரஸ் முயற்சி - பாஜக தலைவர் ஆர்.அசோகா பேட்டி.!
கர்நாடக மாநிலத்தில் கடந்த பாஜக அரசு நிறைவேற்றிய மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய கர்நாடக காங்கிரஸ் முடிவு செய்த நிலையில், கர்நாடகாவை குட்டி பாகிஸ்தானாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது என்று பாஜக தலைவர் ஆர்.அசோகா கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது , "காங்கிரஸ் தலைவர்கள் மத மாற்றத்தின் தூதுவர்களாக மாற முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் அரசின் முடிவை பேராயர் மட்டுமே வரவேற்கிறார். இந்த நடவடிக்கையை வேறு எந்த மதத் தலைவர்களும் வரவேற்றுள்ளாரா?.
![](https://img.seithipunal.com/media/bjp leader ashoka 1-32rnr.png)
மருத்துவம், கல்வி, லவ் ஜிகாத் உள்ளிட்ட காரணங்களால் இந்துக்கள் மதம் மாறுகிறார்கள். காங்கிரஸின் சித்தாந்தம் திப்பு சுல்தானின் சித்தாந்தத்திற்கு ஏற்றது. இந்த முடிவு சமூகத்தின் ஒரு பிரிவினரை திருப்திப்படுத்தவே எடுக்கப்பட்டுள்ளது
ஓட்டுக்களுக்காக காங்கிரஸ் எந்த நிலைக்கும் செல்லும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த முடிவு கர்நாடகாவை குட்டி பாகிஸ்தானாக மாற்ற காங்கிரஸ் விரும்புவதாகவே தெரிகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் தவிர்த்து, மத மாற்றத்துக்கு எதிரான மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்தபோது, யாரும் எதிர்க்கவில்லை. ஆகவே, இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
English Summary
bjp leader ashoka press meet