புதுவையில் பேனருக்கு பூட்டு போட்ட பாஜக அமைச்சர் - வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.!!
bjp minister lock to banar in puthucheri photos viral
புதுவையில் பேனருக்கு பூட்டு போட்ட பாஜக அமைச்சர் - வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.!!
பொதுவாக மக்கள் வீடு, மிதிவண்டி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்காக கதவுக்கு பூட்டுபோட்டு போடுவார்கள். ஆனால் புதுசேரியில், பொது இடத்தில் வைத்துள்ள பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதற்காக பாஜக அமைச்சர் ஒருவர் பேனருக்கு பூட்டு போட்டுள்ள சம்பவம் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.
புதுச்சேரியில், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் சாய்.ஜெ.சரவணன்குமார். பாஜக அமைச்சராக இருக்கும் இவர் புதுசேரியில் ஊசுடு தொகுதியில் வெற்றி பெற்றவர். இந்த நிலையில், இவர் ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதை முன்னிட்டு பேனர் அடித்துள்ளார்.
இந்த பேனரை புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் வைத்துள்ளார். அதில், பிரதமர் மோடி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் இந்த பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதற்காக பின்பக்கமாக பூட்டு போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இருப்பினும் ஏரளாமானோர் அமைச்சரின் இந்த செயலுக்கு கடுமையாக விமர்சித்துள்ளனர்.
English Summary
bjp minister lock to banar in puthucheri photos viral