மின்கம்பத்தில் மோதிய கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம், மொரதாபாத் காந்த் பகுதியில் இன்று மின்கம்பத்தில் கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் தெரிவித்திருப்பதாவது, உத்தரகாண்ட் டேராடூனில் இருந்து உத்திரபிரதேசம் காந்த் பகுதிக்கு அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் வந்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் நீக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கபட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்து கார் ஓட்டுநர் மயங்கி விழுந்ததால் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car crashed electric pole 4 members killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->