CBSE 10&12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வு அறிமுகம் - CBSE அறிவிப்பு.!
CBSE 10th and 12th supplementary exam introduce
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(CBSE) பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று மதியம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. இதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நாடு முழுவதும் மொத்தமாக 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியது. இதில் நாடு முழுவதும் 21,65,805 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் 20,16,779 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் தேர்வு எழுதிய மாணவர்களில் 93.12% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சிபிஎஸ்சிஇ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற துணை தேர்வை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது அதன்படி குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஏதுவாக துணை தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.
அந்த வகையில் பத்தாம் வகுப்பில் 2 பாடங்களிலும், 12 ஆம் வகுப்பில் ஒரு படத்திலும் அதிக மதிப்பெண் எடுக்க துணை தேர்வு எழுதலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
English Summary
CBSE 10th and 12th supplementary exam introduce