ஒடிசா ரயில் விபத்து எதிரொலி.. லோகோ பைலட்டுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். பலர் பய படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ரயில் விபத்து காரணமாக ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இனி ரயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகள் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பணியில் உள்ள பணியாளர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செல்போன் ஆப் செய்யப்பட்டிருப்பது போன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும், ஆப் செய்யப்பட்ட செல்போனை அருகில் வைத்திருக்கவும் தடை செய்யப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ரயில் இயக்குபவர்களின் கவனம் இயக்கும் திறன் போன்றவையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cellphone and smart watch not allowed in train to loco pilots


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->