அதிரடியாக உயரும் அகவிலைப்படி - மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


அதிரடியாக உயரும் அகவிலைப்படி - மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்.!

நாட்டில் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் புதிய அகவிலைப்படி உயர்வு குறித்து அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். புதிய அகவிலைப்படி உயர்வு 4% என்றளவில், நடப்பாண்டின் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.

இந்தத் திட்டத்தின் மூலம் சம்பளத்தில் உயர்வு என்னும் நீண்டகால ஆதாயம் கிடைப்பதுடன், பண்டிகை காலத்துக்கான போனஸ் என்பதற்கு நிகராக கணிசமான நிலுவைத் தொகையும் அரசு ஊழியர்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.

இந்த புதிய அறிவிப்பினால், தற்போதைய அகவிலைப்படி 42% என்பதிலிருந்து 46% என்பதாக அதிகரிக்க உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அடுத்த ஓரிரு வாரங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பாக உள்ளது.

அரசு பணியாளர்கள் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளும் விதமாக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வை பரிசீலித்து வழங்கும் நடைமுறை உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இவற்றை தங்கள் ஊழியர்களுக்கு உரிய காலத்தில் வழங்க முன்வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt announce dearness hike to govt employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->