சிறையில் ஆபத்து! - சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்க நீதிமன்றத்தில் மனு! - Seithipunal
Seithipunal


ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சிறையில் இவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்து சந்திரபாபு நாயுடுவை வீட்டு காவலில் வைக்க அனுமதி வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 19 எம்.எல். ஏக்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். 

இதனால் நேற்று தெலுங்கு தேச கட்சி சார்பில் பந்த் நடைபெற்றது. இதனை அடுத்து எம்.எல். ஏக்கள் 19 பேரும் தொடர்ந்து 72 மணி நேரத்திற்கும் மேலாக வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் அவரது உறவினர்கள், குடும்பத்தினர் என யாரையும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandra babu Naidu house arrest petition


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->