சந்திரபாபு ஆதரவாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு வரும் அக்டோபர் 5ஆம் தேதி  வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.300 கோடியை தவறாக கையாண்டு ஊழல் செய்ததாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

இதுகுறித்த பல்வேறு ஆண்டுகள் விசாரணை நடந்தது வந்த நிலையில், அண்மையில் சந்திரபாபு நாயுடுவை ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது.

இதனை தொடர்ந்து ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் இரண்டு நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இன்றுடன் காவல் முடிவடைகிறது.     

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, சிறையில் வைத்து சந்திரபாபு நாயுடுவிடம் 12 பேர் கொண்ட குற்ற புலனாய்வுத் துறை குழு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பல கேள்விகளுக்கு சந்திரபாபு நாயுடு திக்கு திணறியதாகவும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu nayudu Court Custody Extend


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->