சத்தீஸ்கர் : மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்த கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் பவன் தாக்கூர். இவர் மனைவி சாஹு. சமீப காலமாக மனைவி சாஹுயின் நடத்தையில் சந்தேகபட்டு பவன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த பவன் தன மனைவி என்றும் பாராமல் அவரை கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். 

சில நாட்களுக்குப் பிறகு பவன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த, அண்டை வீட்டார் சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். 

அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவன் வீட்டில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக பவன் தாக்கூரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chathesgarh husband wife body piece hide water tank after kill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->