கடும் சவாலை எதிர்கொண்டு சீனரை மீட்ட இந்திய கடலோர காவல் படை!  - Seithipunal
Seithipunal


மும்பை அருகே ஆராய்ச்சி கப்பல் ஒன்று அரபிக் கடலில் பனமா நாட்டு கொடியுடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அந்த கப்பலில் பயணம் செய்த சீனாவை சேர்ந்த ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 

இதனால் அந்த கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடலோர காவல் படையின் உதவியை நாடினர். 

இந்திய கடலோர காவல் படை, மருத்துவ உதவி என்பதால் உடனடியாக சீன நாட்டியினர் உயிரை காப்பாற்ற கடலுக்குள் விரைந்து சென்றனர். 

அப்போது தென்மேற்கு பருவ மழை காரணமாக வானிலை மிக மோசமாக இருந்தது. இந்நிலையிலும் அதை எதிர்கொண்டு இந்திய கடலோர காவல் படை விரைந்து சென்று சீன கப்பலை அடைந்தது. 

பின்னர் முதல் உதவிக்காக அளித்த ஹெலிகாப்டர் மூலம் அவரை கரைக்கு அழைத்து வந்து கப்பல் ஏஜென்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டார். 

இந்திய கடலோர காவல் படையின் துரித நடவடிக்கையால் சீன நபரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinese rescued Indian Coast Guard


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->