வயநாடு மக்களுடன் ஒட்டு மொத்த நாடும் நிற்கிறது - காங்கிரஸ் தலைவர் கார்கே.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் இரண்டு முறை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரைக்கும் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, அரசியல் கட்சித் தலைவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

"கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக மண்ணுக்கடியில் சிக்கியுள்ளவர்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இந்தநேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வயநாடு மக்களுடன் நிற்கிறது. 

மாநிலங்களவை தலைவர் நீங்கள் எங்களுக்கு தகவலை கொடுக்கிறீர்கள். ஆனால் நாங்கள் மத்திய அரசிடமிருந்து முழு தகவல்களை எதிர்பார்க்கிறோம். வயநாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?. 

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இந்திய ராணுவம் சென்றுள்ளதா? மீட்பு பணி நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை என்ன?. வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்" என்று பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass leader mallikarjune karkhe soeech about vayanadu landslide issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->