ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து தர வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- 

"ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் பேரவைத் தோ்தல் நடத்துவதற்கு ஜனநாயகம் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா். முதலில் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநிலத்திற்கான அந்தஸ்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இங்கு நிலம் மற்றும் வேலைவாய்ப்புகளில் சில பிரச்சனைகள் உள்ளது. அந்த பிரச்னைக்கு சட்ட ரீதியாக தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அந்த மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். 

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இதுவரை 75 மாவட்டங்களைக் கடந்துள்ளது. அவர் தினமும் 23 முதல் 24 கி.மீ. தூரம் சராசரியாக நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass party press meet in jammu kashmeer head office General Secretary jairam ramesh speach


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->