குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10 ஆயிரம் - வாக்குறுதியை வாரி வழங்கும் காங்கிரஸ்.!
congrass promise yearly 10000 provided to womans in rajasthan
வட மாநிலமான ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் ஆட்சிக் காலம் முடிவடைய உள்ளதால், அடுத்த மாதம் 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலை முன்னிட்டு அங்கு ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரசும், கைப்பற்றுவதற்காக பாஜகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில், நேற்று ஜுன்ஜுனு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது மாநில மக்களுக்கு இரண்டு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்.
அதாவது, 'கிரகலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இது பல தவணைகளாக வழங்கப்படும். இதைப்போன்று 1.05 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
இந்த வாக்குறுதிகள் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்தவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும்' என்றுத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary
congrass promise yearly 10000 provided to womans in rajasthan