பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்! புதிய தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா? - Seithipunal
Seithipunal


குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. பாஜக குழந்தைகளை தவறான வழியில் பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்கிறது என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் காணொளி வாயிலாக பாஜகவுக்கு வாக்கு சேகரித்து இருந்தார். 

அந்த சிறுமியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இதனைக் குறிப்பிட்டு காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. இதனையில் தற்பொழுது பிரதமர் மோடி இரு சிறுவர்களுடன் இணைந்து இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. 

அந்த வீடியோவில் ஆறு வருடங்களுக்கு முன்பு ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருந்த இரண்டு பழங்குடி சிறுவர்கள் மோடியுடன் பேசுவது போல் அந்த வீடியோவில் உள்ளது. இது குறித்து பேசிய பிரதமர் மோடி "ஆதரவற்ற இருவர்கள் அவர்கள் வாழ்வு அரசின் சீரிய முயற்சியால் முன்னேற்றம் கண்டுள்ளது. சிறுவர்களில் ஒருவருக்கு எட்டு வயது இன்னொருவருக்கு ஆறு வயது சகோதரர்களான இருவர் ஆறு வருடங்களுக்கு முன்பு தங்கள் பெற்றோரை இழந்தனர். 

அவர்களை கவனிக்க ஆள் இல்லாதது பற்றி அறிந்த நான் பாஜக உறுப்பினர் சி.ஆர் பாட்டீல் என்பவரை அனுப்பி அவர்கள் படிப்புக்கும் இருப்பிடத்திற்கும் வழிவகை செய்தேன். இன்று அவர்களை நேரில் பார்த்து பேசினேன். அவர்களில் ஒருவர் இன்ஜினியராகவும் ஒருவர் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என கூறினர். பெற்றோர் இல்லாமல் வீடு இல்லாமல் அவர்கள் கனவு பெரிதாக இருக்கிறது. அதுவே என்னை பெருமை அடைகிறது" என பேசினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக குழந்தைகளை தவறான வழியில் பயன்படுத்திக் கொள்வது என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் கட்சி தரப்பில் நேரில் புகார் அளித்துள்ளது. விரைவில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திலும் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்டுள்ள புதிய இந்திய தேர்தல் ஆணையர் இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பது சந்தேகம் தான் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress complains against BJP for involving children in election campaign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->