பூங்காவில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி; கொலையா..? தற்கொலையா..? போலீசார் விசாரணை..!
Couple found hanging in a park in Delhi
டெல்லியில் காதல் ஜோடி ஒன்று பூங்காவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.
டெல்லியின் தெற்கு பகுதியான ஹவுஸ் ஹாஸ் என்ற இடத்தில் மான் பூங்கா ஒன்று உள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு ஒரு இளம் ஜோடி பூங்காவில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்குவதை பூங்காவின் காவலாளி பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்த்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த 02 பேரின் உடல்களையும் மீட்டு, உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விசாரணையில் தூக்கில் தொங்கிய வாலிபர் பீஸா கடை ஊழியர் என்றும், 21 வயதானவர் என்றும், அவருடன் இறந்த பெண் 18 வயதுடையவர் என்றும் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த சோக முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், உள்ளூர்வாசிகள் சிலர், இளம் ஜோடியின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏனெனில், அவர்கள் தூக்கில் தொங்கிய மரம் மிக உயரமானது என்றும், அதில் இருவரும் ஏறுவது சாத்தியமில்லாதது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் அவர்கள் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்று கூறுயுள்ளனர். இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Couple found hanging in a park in Delhi