எல்லை தாண்டிய வீரர்... சிறைப்பிடித்த பாகிஸ்தான்!!
Pakistan captures soldier for crossing border
சர்வதேச எல்லையில் தவறுதலாக எல்லை தாண்டிய எல்லை பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து உள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் எல்லையில் 182ஆவது பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.சிங் விவசாயிகளுடன் ஓய்வு எடுக்க நிழல் பகுதிக்கு செல்ல முயன்றபோது, இந்திய எல்லையில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் பி.கே. சிங்கை சிறைபிடித்து சென்றனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில், பயங்கரவாதத்தை ஆதரிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இதனையடுத்து அவரை பாதுகாப்புடன் அழைத்து வர பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பிஎஸ்எப் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
English Summary
Pakistan captures soldier for crossing border