விளம்பரம் போட்டு டார்ச்சர் - பிரபல திரையரங்கிற்கு 1.28 லட்சம் அபராதம்.! - Seithipunal
Seithipunal


படம் துவங்குவதற்கு முன்பு விளம்பரங்களை திரையிட்ட பிரபல பி.வி.ஆர்.,சினிமாஸ் நிறுவனத்துக்கு, பெங்களூரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 1.28 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பி.வி.ஆர்., சினிமாஸ் என்ற கார்ப்பரேட் நிறுவனம் திரையரங்குகளை நடத்தி வருகிறது. அதன் படி கடந்த 2023, டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அபிஷேக் என்ற நபர், தன் குடும்ப உறுப்பினர்கள் இருவருடன், பெங்களூரு ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர்., - ஐநாக்ஸ் திரையரங்கில் சாம் பஹதுார் என்ற திரைப்படத்தை பார்க்க சென்றார்.

மாலை 4:05 மணிக்கு திரைப்படம் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 25 நிமிடங்களுக்கு விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களின் டிரைய்லர்கள் திரையிடப்பட்டன. பின்னர் 4:30 மணிக்கு சாம் பஹதுார் திரைப்படம் திரையிடப்பட்டது. இது குறித்து, அவர் பெங்களூரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார். 

இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான பி.வி.ஆர்., தரப்பு வழக்கறிஞர், 'திரைப்படத்துக்கு முன் அரசின் பொது சேவை விளம்பரங்கள் காட்டப்பட்டன. 'இது பொதுமக்களின் நன்மைக்காக போடப்பட்டது. அனுமதியின்றி மனுதாரர் திரையரங்கில் போடப்பட்ட விளம்பரங்களை படம் பிடித்துள்ளார்' என்று வாதிட்டார். 

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், 'பொது சேவை விளம்பரங்கள், 10 நிமிடங்களுக்கு மட்டுமே திரையிட வேண்டும்; அவர் வீடியோவில் பதிவு செய்தது விளம்பரங்களை தானே தவிர, திரைப்படத்தை அல்ல'. மனுதாரர் அளித்த ஆதாரத்தில் திரைப்படம் துவங்கும் முன் போடப்பட்ட விளம்பரங்களில் 95 சதவீதம், தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானது. 

பல்வேறு பணிகளுடன் பிசியாக இருக்கும் நபர்கள், தேவையில்லாத விளம்பரங்களைப் பார்ப்பது மிகவும் கடினமானது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் படம் பார்க்க வருவதால், அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று அர்த்தம் கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படத்தை துவங்காமல் இருந்த பி.வி.ஆர்., சினிமாஸ் நிறுவனத்துக்கு 1.28 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. 

இதில், 1 லட்சம் ரூபாயை, நுகர்வோர் நல நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 20,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 8,000 ரூபாயும் வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில், திரைப்படம் துவங்குவது தொடர்பாக, சரியான நேரத்தை டிக்கெட்டில் குறிப்பிட வேண்டும்" என்று தெரிவித்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

court fine to pvr cinema for extra advertisement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->