இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகம் பதிவான மாநிலம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக முப்பத்தி ஒரு ஆயிரம் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இதுவரை பார்த்திராத அளவில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 31000 அளவுக்கு பதிவாகி உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

இந்த 31 ஆயிரம் வழக்குகளில் 11 ஆயிரம் வழக்குகள் பெண்களுக்கு உணர்வுப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தும் போன்ற குடும்ப வன்முறை போன்ற குற்றச் சம்பவங்கள் ஆகும். 

அதில், 6633 வழக்குகள் வீட்டில் நடக்கும் குடும்ப வன்முறை சம்பந்தமாக பதியப்பட்ட வழக்குகள் ஆகும். வரதட்சனை உள்ளிட்ட கொடுமைகள் சம்பந்தமாக 4580 வழக்குகளும் பதிவாகி உள்ளது. 

அதிகபட்சமாக நாட்டிலேயே உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக 15228 குற்ற சம்பவங்கள் பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் 3336 குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

மூன்றாவதாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1504 குற்ற சம்பவங்களும், ஹரியானாவில் 1460 குற்ற சம்பவங்களும், பீகார் மாநிலத்தில் 1456 குற்ற சம்பவ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Crime Against Women in India Report


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->