நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணிப்பு.!
Current financial year economy
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
பணக்கொள்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் கடன் மீதான வட்டி விகிதம் மாற்றங்கள் ஏதும் இல்லாமல் 4 விழுக்காடாக தொடரும் என தெரிவித்தார்.
மேலும் வங்கிகளின் வைப்புத் தொகைக்காக ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதமும் எந்தவித மாற்றமும் இல்லாமல் 3.5 விழுக்காடாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் கொரோனா சூழலிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும் கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.9 விழுக்காடாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக இருக்கும் என கணக்கில் கொண்டு பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டு உள்ளதாகவும் அது 7.2 விழுக்காடு என்ற அளவில் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
English Summary
Current financial year economy