மகாராஷ்டிரா: சுற்றுலா சென்ற 14 வயது மாணவருக்கு மாரடைப்பா! உண்மை காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவின் கன்சோலியில் உள்ள நவி மும்பை நகராட்சி நடத்தும் பள்ளியில் 14 வயதுடைய ஆயுஸ் தர்மேந்திரன் சிங் என்ற மாணவன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரைப் பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி சுற்றுலாவிற்கு மற்ற மாணவர்களுடன் ராய்காட் மாவட்டம் கோபோலியில் உள்ள இமாஜிகா தீம் பார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆயுஷ் தர்மேந்திரன் சிங் பயணத்தின் போது அசௌகரியமாக உணர்ந்ததால் பெஞ்சில் அமர்ந்துள்ளார். பிறகு சில வினாடிகளிலே திடீரெனத் தரையில் சரிந்து விழுந்தது அங்குள்ள மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

சிறுவனுக்கு மாரடைப்பு:

இதைக் கண்ட மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆயுஸ் தர்மேந்திரச் சிங் மயங்கியதாகத் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பூங்காவிற்குள் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அச்சிறுவனை அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பிறகு தனியார் மருத்துவமனைக்குச் சிறுவனைக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரி முன்னிலையில் சிறுவனுக்குப் பிரேத பரிசோதனைச் செய்யப்பட்டது. அதில் சிறுவன் மாரடைப்பால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தத் திடீர் சம்பவம் தொடர்பாகக் காலாப்பூர் காவல் நிலையத்தில் விபத்து மரணம் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவலர்கள் சிறுவன் மாரடைப்பு மரணம் காரணமாக மேற்கொண்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death in Maharashtra 14 year old student who went on a trip suffered a heart attack


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->