வாகன சோதனையின் போது லஞ்சம் - போக்குவரத்து காவலருக்கு சிறை.!
jail penalty to police officer for bribe
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் சவுரிராஜன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந்தேதி காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தங்கராஜ் என்பவர் சவுரிராஜனின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
அப்போது சவுரிராஜன் உரிய ஆவணங்கள் இன்றி வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக கூறி அவரது அடையாள அட்டையை உதவி ஆய்வாளர் தங்கராஜ் பறிமுதல் செய்ததுடன், வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2,000 லஞ்சமாக தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இது குறித்து சவுரிராஜன் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.2,000 லஞ்சப்பணத்தை வாங்கிய தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் தனி நீதிபதி வசந்தகுமார் முன்பாக நடந்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தங்கராஜை குற்றவாளி எனக்கூறி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
English Summary
jail penalty to police officer for bribe