தற்போதைய காலம் இந்திய பாதுகாப்புத் துறையின் பொற்காலம் - அமைச்சர் ராஜ்நாத் சிங் - Seithipunal
Seithipunal


குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற 'பாதுகாப்புக்கான முதலீடு' என்ற நிகழ்வில் பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், 2025 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பு உற்பத்தியை 12 பில்லியன் டாலரில் இருந்து 22 பில்லியன் டாலராக அதிகரிப்பதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. 

உள்நாட்டு சந்தையில் நியாயமற்ற வெளிநாட்டுப் போட்டியிலிருந்து நமது உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நமது முதலீட்டாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். 

அது அவர்களுக்கு நல்ல வருமானத்தை மட்டுமல்ல, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் அங்கீகாரத்தையும் அளிக்கும் நமது பாதுகாப்புத் துறை ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. 

போர் விமானங்கள், விமானம் தாங்கிகள், முக்கிய போர் டாங்கிகள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதன் மூலம் நமது தொழில்துறை அதன் திறன்களை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் தற்போதைய காலம் இந்திய பாதுகாப்புத் துறையின் பொற்காலம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defence minister says The present period is the golden age of Indian defense


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->