மிஸ் பண்ணிராதீங்க!...பொங்கல் பண்டிகைக்கு ரயில்ல போனும்னா உடனே இத பண்ணுங்க!
Do not miss it If you are going by train for Pongal festival do this immediately
பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர், இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆண்டு தோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலானோர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் நிலையில், பயணிகளின் வசதி மற்றும் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க ரெயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும்.
அதன்படி வரும் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 13-ம் தேதி போகி பண்டிகையம், 14-ம் தேதி பொங்கல் பண்டிகையும், 15-ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16-ம் தேதி காணும் பொங்கல் என கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, இன்று முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவுதொடங்குகிறது. அதன்படி, ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் இன்றும், ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ய நாளையும் , ஜனவரி 12-ம் தேதிக்கு வரும் 14-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி 13-ம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ம் தேதி முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்றும், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
Do not miss it If you are going by train for Pongal festival do this immediately