திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கிற ஒரு துருப்புச் சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான்...!!! - தொல். திருமாவளவன்
only trump card they weaken DMK alliance Liberation Tigers Thol Thirumavalavan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வீடியோ ஒன்று எடுத்து அதை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் பங்கேற்க வைப்பது மன அழுத்தத்தை தருகிறது.
ஒருநாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லை.அழுத்தம் கொடுத்து என்னை இழுத்துச் செல்வதால் கட்சி பணிகளை என்னால் மேற்கொள்ள முடியவில்லை.
தி.மு.க.வை மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் தன்னிச்சையாக எடுக்க முடியும்.
தி.மு.க. கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் கருத்தகளை சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும்.
தி.மு.க.கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கிற ஒரு துருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான்" எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
only trump card they weaken DMK alliance Liberation Tigers Thol Thirumavalavan