தபால்காரர் என ஆளுநரை விமர்சிப்பது மு.க ஸ்டாலின் வகிக்கும் பதவிக்கு அழகல்ல....!!! - நயினார் நாகேந்திரன்
Criticizing Governor postman not appropriate position held by MK Stalin Nainar Nagendran
திண்டுக்கல் மாவட்டம் பழனிமலை முருகன் கோவிலுக்கு, பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன், திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று 'குழந்தை வேலாயுத சுவாமி'யை தரிசனம் செய்தார். அதன்பிறகு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்தரன் ,அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில்,"மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆளுநரை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான தபால்காரர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல.
நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என தெரிவித்திருப்பது அவருடைய சொந்த கருத்து. மேலும் அ.தி.மு.க. தொடர்பான கேள்விகள் வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
English Summary
Criticizing Governor postman not appropriate position held by MK Stalin Nainar Nagendran