முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு செய்யாமல் நாடகமாடுகிறார்..!!! - எச்.ராஜா
CM MK Stalin acting out without filing review petition Supreme Court H Raja
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் குறிப்பிட்டதாவது,"நாடு முழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்தது தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி. நீட் தேர்வை முன் மொழிந்தது தி.மு.க. எம்.பி.யாக இருந்த காந்தி செல்வன்.

தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியின்போது 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்றது.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு காரணமாகவே நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு செய்யாமல் முதலமைச்சர் நாடகமாடுகிறார். டாஸ்மாக்கில் ஊழல் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் சிறை செல்வது உறுதி. டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மதுபான ஊழலில் சிறை சென்றார்.
அதே போல் தமிழகத்திலும் நடக்கும். தமிழகம் முழுவதும் வளைத்து வளைத்து கஞ்சாவை பிடிக்கும் தமிழக காவலர்கள் சிந்தடிக் போதைப் பொருட்களை கண்டுகொள்ளவில்லை என்று தமிழக ஆளுநர் கேட்ட கேள்விக்கு இதுவரை தமிழக முதலமைச்சர் பதில் சொல்லாதது ஏன்? ' என்று கேள்வி எழுப்பினார்.
அவருடன் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.இந்தப் பேச்சு சர்ச்சையாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
CM MK Stalin acting out without filing review petition Supreme Court H Raja