ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்.!
earthquake in jammu kashmir
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், கட்டடங்கள் குலுங்கிய நிலையில், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், காலை 10.43 மணிக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை.
மேலும், பொருட்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாகவே காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
earthquake in jammu kashmir