#பேரதிர்ச்சி : இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ஆராய்ச்சியாளரின் கணிப்பு பலித்தது.!
Earthquake in meghalaya Thats Dutch researcher guess are right
துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறன. அதன்படி இதுவரை 7 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால் மீட்பு பணிகளில் மிகுந்த தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். மேலும் 1.4 கோடி பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 84 ஆண்டுகளில் மிக மோசமான பேரிடராக இது கருதப்படுகிறது.
இந்த நிலையில் டட்ச் ஆய்வாளர் பிரான்ஸ் ஹுஹர்பீட்ஸ் துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்து கூறியிருந்தார். அதை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. அவர் கணித்ததைப் போலவே அடுத்த இரண்டு நாட்களில் துருக்கியில் நில நடுக்கம் ஏற்பட்டது.
மேலும் அவர் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று தெரிவித்து இருந்தார். அவர் கூறியதைப் போலவே தற்போது மேகாலயாவில் இருக்கும் துரா பகுதியில் பகல் 12:52 மணிக்கு 3.0 ரிட்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர்.
English Summary
Earthquake in meghalaya Thats Dutch researcher guess are right