டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி..இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
Echo of Trump s tax Indian rupee hits record low
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25% வரியை அறிவித்ததையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று பிப்ரவரி 10 வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் டாலரின் மதிப்பு 87.43 ரூபாயாக இருந்த நிலையில் இன்று திங்கள்கிழமை சந்தை தொடக்கத்தில் 43 பைசா வீழ்ச்சி அடைந்து ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக உள்ளது. மேலும் இந்திய ரூபாய் இதுவரை இவ்வளவு வீழ்ச்சியை சந்திதது கிடையாது என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் முன்னதாக நேற்று பிப்ரவரி 9அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25% வரியை அறிவித்தார்.இதையடுத்து
இதன்காரணமாக ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது என்று கூறுகின்றனர்.
மேலும் அனைத்து நாடுகளிலிருந்தும் உலோக இறக்குமதிகளுக்கு இந்த வரிகள் பொருந்தும் என்றும் இந்த வார இறுதியில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாகத்தான் ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் இதற்கிடையே மந்தமான இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.
English Summary
Echo of Trump s tax Indian rupee hits record low