வக்பு திருத்த சட்டத்தின் எதிரொலி; விசிஷ்ட சேவா பதக்கம் வென்ற முஸ்லிம் ஐபிஎஸ் அதிகாரி பதவி விலகல்..! - Seithipunal
Seithipunal


பீஹாரில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முஸ்லிம் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார்.

பீகார் மாநிலம் சீதாமஹியைச் சேர்ந்தவர்  நூருல் ஹுதா தன்பாத். 1995ஆம் ஆண்டு பயிற்சி முடித்த இவர் ஐபிஎஸ் அதிகாரி. இவருக்கு அசானோல் மற்றும் டெல்லி ஆகிய ரயில்வே பிரிவுகளில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக இருமுறை குடியரசுத் தலைவரின் விசிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், காவல்துறைத் தலைவரின் டிஜி சக்ரா விருதையும் இருமுறை பெற்றுள்ளார்.

அத்துடன்,   நூருல் ஹுதா தன்பாத், சீதாமஹியில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள 300 மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளித்து வருகிறார். அவர் தற்போது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஷீல் இன்சான் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Echoes of the Waqf Amendment Act Muslim IPS officer resigns


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->