பாஜக ஆட்சியில் கல்விமுறை ஊழல்வாதிகளின் கையில் உள்ளது - பிரியங்கா காந்தி! - Seithipunal
Seithipunal


முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், பாஜக ஆட்சியில் கல்விமுறை ஊழல்வாதிகளின் கையில் இருப்பதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தாண்டு வெளியான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவிற்கு 67 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்து உள்ளனர். அரியானா  ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 7 பேர் முழுமதிப்பெண் எடுத்திருப்பது நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

இந்தநிலை, இந்த நிலையில் ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வில் விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு ஏந்துள்ளது. அதனை அடுத்து இன்று நடைபெற இருந்த முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா  காந்தி தனது சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீட் யுஜி தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. நீட் முதுநிலை தேர்வு ரத்து செய்யப்பட்டது. யுஜிசி நெட், சிஐஎஸ்ஆர் நெட்  ஆகிய தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வி துறையும் மாஃபியா மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பேராசை பிடித்தவர்களிடம் ஒப்படைத்து விடும் அரசியல் பிடிவாதம், ஆணவம், வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து ஆகியவை கல்விமுறையின் அடையாளமாக மாறி உள்ளது.

பாஜக அரசியல் ஒரு தேர்வை கூட நியாயமான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. பாஜக ஆட்சியில் நாட்டில் திறமையான இளைஞர்கள் பாஜகவின் ஊழலை எதிர்த்து போராடுவதில் தங்களின் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Education system under BJP regime is in the hands of corrupt people Priyanka Gandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->