#BREAKING :: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவி காலி என அறிவிப்பு..!!
Election Commission announced Erode East Constituency MLA post is vacant
முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான திருமகன் ஈவேரா கடந்த ஜன.4ம் தேதி ஈரோடு கே.எம்.சி ஹெச் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
அவரின் இறப்பிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும் நேற்று சட்டமன்ற வளாகத்தில் திருமகன் ஈவேராவின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக சட்டமன்றத்தில் திருமகன் ஈவேரா இறப்பிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ள நிலையில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் செய்தியாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எப்பொழுது நடைபெறும் என கேட்டனர். அதற்கு அவர் இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
English Summary
Election Commission announced Erode East Constituency MLA post is vacant