ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டுமா? - வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.!
election commission decide voter id connection to adhar card
தேர்தலின்போது போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்று பாஜக மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிக அளவு வாக்களார்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
அதாவது, மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள எபிக் எண், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளதால் வாக்காளர்கள் பட்டியலில் மோசடி நடைபெற்றுள்ளது நிரூபணமாகி உள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தெரிவித்திருந்தது.

இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இந்த தவறு கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்துள்ளது. இன்னும் 3 மாதங்களில் இது சரிசெய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இதுபோன்ற குறைபாட்டை தவிர்க்க ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைப்பது தொடர்பாக மத்திய உயர் அதிகாரிளுடன் ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முடிவு செய்துள்ளார்.
வருகிற செவ்வாய் கிழமை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர், சட்டமன் செயலாளர் மற்றும் UIDAI சிஇஓ ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நடைமுறை சாத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றுத் தெரிகிறது.
English Summary
election commission decide voter id connection to adhar card