முதல்வரின் காரை சோதனை செய்த பறக்கும் படை அதிகாரிகள் - கர்நாடகாவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


28 மக்களவை தொகுதிகள் உள்ள கர்நாடகாவில் முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வரும் 26 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதால் பணம், தங்க நகைகள், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோலார் மாவட்ட எல்லையான ராமசந்திரா கேட் அருகே நேற்றிவு தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வழியாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் பைரதி சுரேஷ் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை தடுத்து நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள், சோதனைக்கு பின்னர் காரை கோலார் மாவட்டத்திற்குள் அனுமதித்தனர். முதல்வரின் காரையே சோதனை செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election fly squad officers check karntaga cm siddaramaiya car


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->